சமீபத்தில் நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் 40ஆவது ஆண்டு விழாவில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பல கேள்விகளை கேட்டிருந்தார். புதிய கல்விக் கொள்கை முழுக்க முழுக்க பணம் இருப்பவர்களுக்கு மட்டுமாக தெரிகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு அது வரம் இல்லை சாபம் என்பதை சுட்டிக்காட்டினார். இவருடைய கேள்விகளுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர். பாஜகவினர் சூர்யா பேசியது விளம்பரத்திற்காக என்று விமர்சித்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
--LINKS CODE------
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் நடிகர் சூர்யா குடிமகனாகதான் அந்த கேள்விகளை கேட்டேன் என்று சூர்யா தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். “சமமான வாய்ப்பும், தரமான கல்வியும் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை உணர்ந்த ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என் கேள்விகளை முன் வைக்கிறேன்” என்று சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரின் பேரன்புக்கும், பேராதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!?? #NEP#AgaramFoundation@agaramvision#தேசியகல்விகொள்கை#NationalEducationPolicypic.twitter.com/IpBaZYx9tH
— Suriya Sivakumar (@Suriya_offl) July 20, 2019