சிதம்பரம் ரயில் நிலையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக ரூ 1 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா பொதுமக்கள் பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையம் முக்கிய ரயில் நிலையமாகும் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம். அண்ணாமலை பல்கலைகழகம் உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிதம்பரம் நகருக்கு ஆன்மீக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் ரயில்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள். ரயில் நிலையங்களில் ரயில்கள் வரும்போது சரியான விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. மற்றும் குற்ற சம்பவங்களும் நடைபெற்று வந்தது. மேலும் பயணிகளிடம் திருநங்கைகள் தொந்தரவுகள் என பல்வேறு முகம் சுளிக்கும் சம்பவங்கள் நடைபெறுவதாக ரயில் பயணிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

 surveillance camera  in Chidambaram railway station

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புவனகிரி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய அம்பேத்கார் சிதம்பரம் இருப்புபாதை காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணி மாற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களை கணக்கில் கொண்டு சிதம்பரம் ரயில் நிலைய மேலாளர் கனகராஜிடன் இணைந்து பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ1 லட்சத்தில் 18 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளார்கள்.

Advertisment

 surveillance camera  in Chidambaram railway station

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பொறுப்பேற்று வந்த சில நாட்களில் ரயில்கள் வரும்போது பலர் வண்டியில் இறங்கும்போதும் ஏறும்போதும் சரியான விழிப்புணர்வு இல்லாததால் விழுந்து விடுகிறார்கள் மேலும் ரயில் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு பொதுமக்கள் ஆதரவுடன் இந்த கண்காணிப்பு கேமராவை பொருத்தி உள்ளோம். இதனை வரும் நவம்பர் 30-ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள கவர்னர் வருகை தருகிறார். அப்போது ரயில்வே உயரதிகாரிகள் மற்றும் ரயில்வே இருப்புப்பாதை காவல் பணியின் உயரதிகாரிகள் இங்கு வருவார்கள். அவர்களை கொண்டு இந்த கண்காணிப்பு கேமராவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கவுள்ளதாக கூறினார்.