திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் எதிர்பாராத நேரத்தில் மத்திய மண்டல டி.ஐ.ஜி. சரவணன் சுந்தர் சர்ப்ரைஸ்விசிட் செய்துள்ளார்.
காவல் நிலையத்திற்குள் நுழைந்த அவர் எத்தனைக் காவலர்கள் பணியில் உள்ளனர், இரவுப் பணியில் யாரெல்லாம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மற்றும் குற்றம் தொடர்பான கோப்புகள், புகார்கள் குறித்த பதிவேடு என அனைத்தையும் பார்வையிட்டுள்ளார்.
மேலும், காவல் நிலையத்தை தேடி வரக்கூடிய பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் புகார்களைப் பெற்று உடனடியாக அதைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளைக் காவலர்கள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.