
சென்னை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரியல் திரையரங்கம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கத்தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையைத்தமிழக அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மூலமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களைத்தமிழக வனத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரில் அருங்காட்சியகம் மற்றும் உயிரியல் திரையரங்கம் அமைக்கப்படுவதற்கான அரசாணையைத்தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மொத்தம் 4.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயிரியல் திரையரங்கம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளுக்கு வனத்துறை திட்டமிட்டுள்ளது. வன உயிர்களைப் பாதுகாப்பது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை வரும் தலைமுறைக்கு ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டத்தைத்தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டம் முடிக்கப்படும் அரசாணை மூலமாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us