Advertisment

பூண்டி ஏரியில் நீர் திறப்பு...கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 Surplus water in Boondi Lake opens

'நிவர்' புயல் காரணமாகசென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர்சூழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையின்குடிநீர்த் தேவைக்குஆதாரமாகவிளங்கும்பூண்டி ஏரியிலிருந்து தற்பொழுது முதல் முறையாகஉபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் பூண்டிஏரியிலிருந்து தற்பொழுது 1,000 கனஅடி உபரி நீர் முதல்கட்டமாகத் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பென்ஜமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாஆகியோர்பூண்டி ஏரியில் நீர் திறந்து வைத்தனர்.பூண்டிஏரியின்10, 12 எண் கொண்டஇரு மதகுகளில் தலா 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.நீர்வரத்தைப் பொறுத்து, பூண்டி ஏரியில் நீர்திறப்புஅதிகபட்சம் 10 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கலாம் எனத்தவகல்கள் வெளியாகியுள்ளது. பூண்டிஏரியில்உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisment

nivar cyclone poondi lake
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe