Skip to main content

பூண்டி ஏரியில் நீர் திறப்பு...கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

 Surplus water in Boondi Lake opens

 

'நிவர்' புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையின் குடிநீர்த் தேவைக்கு ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியிலிருந்து தற்பொழுது முதல் முறையாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியிலிருந்து தற்பொழுது 1,000 கனஅடி உபரி நீர் முதல்கட்டமாகத் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பென்ஜமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் பூண்டி ஏரியில் நீர் திறந்து வைத்தனர். பூண்டி ஏரியின் 10, 12 எண் கொண்ட இரு மதகுகளில் தலா 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்தைப் பொறுத்து, பூண்டி ஏரியில் நீர்திறப்பு அதிகபட்சம் 10 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கலாம் எனத் தவகல்கள் வெளியாகியுள்ளது. பூண்டி ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.    

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூண்டி ஏரியில் நீர்திறப்பு... வெள்ளிவாயல் பகுதியில் 'வெள்ளம்'

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

Boondi Lake floods

 

தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்துவரும் நிலையில், கொற்றலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடசென்னை பகுதியில் உள்ள கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. திருவள்ளூர் வெள்ளிவாயல் பகுதியிலிருந்து தாழ்வான பகுதியில் உள்ள மக்களை முகாம்களுக்குச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பெய்யும் கனமழை காரணமாகப் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நேற்று (19.11.2021) கொற்றலை ஆற்றில் 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

மேலும், நீர்வரத்து அதிகமாவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை அடிப்படையில் மத்திய தேசிய மீட்புப் படையினர் 22 பேரும், மாநில பேரிடர் மீட்புப் படையினர் 31 பேரும் இரவுமுதல் தயார் நிலையில் உள்ளனர். வடசென்னை உட்பட, தாழ்வான பகுதியான வெள்ளிவாயல் கிராமப்பகுதியில் கொற்றலை ஆற்றின் வெள்ள நீர் புகுந்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தாழ்வாக உள்ள பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வன், வட்டாட்சியர் மணிகண்டன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

 

 

Next Story

‘மழையால் பாதித்த மக்களுக்கு புதிய வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்’ போராட்டத்தில் விவசாயிகள் சங்கம்

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

Farmers' Association in the struggle to 'build new houses for people affected by the flood
                                                            மாதிரி படம் 

 

புரவி புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், வீடுகளை இழந்த அனைத்து மக்களுக்கும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில்  கான்கிரீட் வீடுகள் அமைத்து தரவேண்டும் என்றும், தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

 

கரோனா பொது முடக்கத்தால் முற்றிலுமாக வேலை வாய்ப்பை இழந்து, வருமானமின்றி, வாழ் நாட்களை நகர்த்தவே படாதபாடு பட்டுக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு, நிவர் மற்றும் புரவி புயலால் பெய்த தொடர் மழையால் முற்றிலுமாக முடங்கினர்.

 

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து விவசாய, மற்றும் தொழிலாளர் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், வீடு இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புது வீடு கட்டித் தரவேண்டும் என திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் செய்தனர்.

 

போராட்டத்தில்  மத்திய மாநில அரசுக்கு  எதிராக  கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.