குழந்தை மீட்பு நடவடிக்கையை தாமதப்படுத்தும் பாறைகள்...

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், நேற்று முன்தினம் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

surjith

20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை, மீட்பு பணிகளின் போதே மேலும் உள்நோக்கி சென்று தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ளது. 40 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் வேகம் தற்போது குறைந்துள்ளது. ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் அமைப்பதற்கான பணிகளில் ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் ஈடுபட்டுள்ள நிலையில், பாறைகள் அதிகம் இருப்பதால் சுரங்கம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழி தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கே பாறைகள் அதிக அளவில் இருப்பதால் குழி தோண்டும் பணி தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

surjith
இதையும் படியுங்கள்
Subscribe