தமிழ்நாடு அறுவை அரங்கு நுட்புனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் டி.எம்.எஸ்.வளாகத்தில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற அறுவை அரங்கு நுட்புனர்கள் சுமார் 3500க்கும் மேற்பட்டோர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அவர்கள், கடந்த பதினாறு வருடங்களாக நிரப்பப்படாமல் இருக்கும் அறுவை அரங்கு நுட்புனர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisment