Advertisment

நீதிமன்றத்தில் போலீசை போட்டு தாக்கிய கொள்ளையன் சுரேஷ்!

திருச்சி லலிதா ஜூவல்லரி யில் கடந்த 2ஆம் தேதி 13 கோடி மதிப்புடைய தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், கனகவல்லி, தஞ்சாவூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூர் நீதிமன்றத்திலும் இவனுடைய அக்காவான கனகவல்லியின் மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.

Advertisment

police

திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் வங்கியில் 470 பவுன் நகை 19 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. லலிதா ஜீவல்லரி நகைக்கடை கொள்ளை சிக்கியவர்கள் தான் இங்கும் கைவரிசை காட்டியுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் முருகன் பெங்களூர் போலீசார் கஸ்டடியில் எடுத்து திருச்சிக்கு அழைத்து வந்து கல்லணை அருகே உள்ள ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ தங்க நகைகளை அள்ளி சென்றனர். தொடர்ந்து அவனிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

அதேபோல் சுரேஷ்யையும் திருச்சி போலீசார் கஸ்டடி எடுத்து நகை கொள்ளை பற்றி விசாரித்து வந்தனர் ஏழு நாள்கள் முடிந்து 21.10.2019 அன்று சுரேசை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் . இந்த நிலையில் வங்கிக் கொள்ளை தொடர்பாக போலீஸ் காவலில் எடுத்து அனுமதி கோரி ஶ்ரீரங்கம் கோர்ட்டில் நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் 22.10.2019 மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணையை போலீசார் ஶ்ரீரங்கம் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து நீதிபதி சிவகாமிசுந்தரியின் முன் ஆஜர்படுத்தினர் .

Advertisment

அப்போது மீண்டும் கஸ்டடிக்கு அனுப்ப சுரேஷ் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் காவல் முடிந்த நிலையில் எனது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என சுரேஷ் கூறியுள்ளான். இந்த மனுவை எடுத்து சுரேஷ் அறிக்கை அனுப்ப கோரும் மனு மீதான விசாரணை இன்று நடந்தது .

இதனிடையே மதுரையை சேர்ந்த கணேசனை டோல்கேட் போலீசார் கடந்த 18ம் தேதி முதல் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால் கணேசனை போலீசார் நாளை ஸ்ரீரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த நிலையில் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தபோது கொள்ளையன் சுரேஷ் திடீரென பத்திரிகையார்களிடம் பேசினான்.

அப்போது எனது குடும்பத்தினரை போலீசார் பிடித்து சித்திரவதை செய்தனர் அதனால் தான் நான் செய்த தவறை ஒப்புக்கொண்டு கோர்ட்டில் சரண் அடைந்தேன். நடந்த எல்லாவற்றையும் போலீசாரிடம் கூறி விட்டேன். ஆனாலும் எனது குடும்பத்தினர்கள் உறவினர்கள் நண்பர்கள் 18 பேரை போலீசார் பிடித்து சித்திரவதை செய்து வருகின்றனர் இதில் சிலர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். என்றால் கொள்ளையன் சுரேஷ் திடீரென போலீசாரை குற்றம்சாட்டி கோர்ட்டு வளாகத்தில் போட்டு தாக்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்போலீசாரே அதிர்ச்சியடைந்தனர்.

police suresh thiruchy
இதையும் படியுங்கள்
Subscribe