நடிக்கரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று கடலூர் வந்தார். இங்குள்ள அக்க்ஷரா வித்யாசிரமம் என்ற தனியார் பள்ளி நடத்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பிறகு மாணவ மாணவியர்களுக்கு பரிசுப் பொருட்கள் இனிப்புகள் வழங்கி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் அங்கு அழகிய நத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் உரையாடிவிட்டு தொடர்ந்து தேவனாம்பட்டினம் கிராமத்தில் நடந்த திறந்த வெளி கூட்டத்தில் பேசினார். அப்போது வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி உறுதியாக போட்டியிடும் என்றார்.