தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம்!

Surasamaharam, the main event of the Dasara festival!

உலக புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் பக்தர்களின்றி நள்ளிரவில் நடைபெற்றது. அதைப்போல பல்வேறு கோயில்களில் தசரா திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் திருச்செந்தூருக்கு அருகே உள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தசரா எளிமையாக நடைபெற்றுள்ளது. தசரா திருவிழாவின் 10- வது நாளான நேற்று (15/10/2021) நள்ளிரவு 12.00 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்தார். தொடர்ந்து, வெவ்வேறு உருவங்களில் வரும் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு முத்தாரம்மனுக்கு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி நிகழ்வின் இறுதி நாளான நேற்று நரகாசுரனை வதம் செய்ய அம்பாள் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அலங்காரத்தில் வீதி உலா வந்து ராஜகோபுரம் முன் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல், ராமேஸ்வரம், ராமநாதசுவாமி திருக்கோயிலில் அம்பாள் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி திருக்கோயில் கிழக்கு கோபுர வாசலில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Festival kulasekarapattinam navarathri
இதையும் படியுங்கள்
Subscribe