Skip to main content

வன்கொடுமை சட்டப்பிரிவு கேடயம் தான், வாள் அல்ல! - ஈஸ்வரன்

Published on 22/03/2018 | Edited on 22/03/2018
eswaran

 

பொய்யாக புனையப்படுகின்ற வன்கொடுமை புகார்களை தடுக்கும் நடவடிக்கையாக உச்சநீதிமன்ற தீர்ப்பை பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

’’எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை சட்டப்பிரிவில் பதிவாகும் வழக்குகளில் தவறாகவும், உள்நோக்கத்தோடும் புனையப்படும் வழக்குகள் ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் உரிமைகளை மறுப்பதாக அமைகிறது. மற்ற சாதிகளை சார்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் இருக்கின்ற பகையின் காரணமாக பழிதீர்க்கும் நடவடிக்கையாக  எஸ்.சி, எஸ்.டி பிரிவினரில் ஒருவரை தூண்டி வழக்கு போட வைப்பது எதார்த்தத்தில் இருக்கின்ற உண்மை. இப்படிப்பட்ட ஒரு சிலரின் நடவடிக்கைகள் சாதிகளுக்கு இடையேயான மிகப்பெரிய வன்முறைகளுக்கு வித்திட்டு விடுகிறது.

 

வன்கொடுமை சட்டப்பிரிவு எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை பாதுகாக்கும் கேடயமாக உருவாக்கப்பட்டது. ஆனால் அதுவே வாளாக மாறி மற்றவர்களை துன்புறுத்த துணிவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இதை உச்ச நீதிமன்றம் புரிந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் உயர் அதிகாரிகளின் ஒப்புதலை பெற்று தான் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும், கீழமை நீதிமன்றங்களில் முன் ஜாமீன் வழங்க முடியும் என்பதும் இந்தியாவில் பெருவாரியான மக்களால் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு. இதன் மூலம் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு சிலரால் தூண்டப்படும் கலவரங்களும், வன்முறையும் தடுக்கப்பட்டிருக்கின்றது. காவல்துறை அதிகாரிகள் இந்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்’’

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு முறைகேடு; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Supreme Court action order to the central government to NEET examination malpractice

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். அந்த வகையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. வரும் ஜூன்14 ஆம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இத்தகைய சூழலில்தான் மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி இருந்தது. நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் என நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.  இந்த முறைகேடு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஜூன் 14ஆம் தேதி இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பரபரப்பான நேரத்தில் சத்தமே இல்லாமல் நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 67 பேர் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்ததாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் எனப் பலரும் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்து வருகிறது.

Supreme Court action order to the central government to NEET examination malpractice

இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று (18-06-24) உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நீட் தேர்வு விவகாரத்தில் யாராவது ஒருவர் அதாவது 0.001% அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும். தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறும் சூழலை யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற குழந்தைகள் கடினமாக படிக்கின்றனர் என்பதை யோசித்துப் பாருங்கள். மோசடி செய்த ஒருவர் மருத்துவராக மாறுவதை கற்பனை செய்து பாருங்கள்’ என கருத்து தெரிவித்து இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது, மேலும், வினாத்தாள் கசிவு, முறைகேடு வழக்கின் விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.  

Next Story

நீட் தேர்வு தொடர்பான விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Matter related to NEET examination Supreme Court action order

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு; நீட் தேர்வு குளறுபடிகள்; ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்துள்ளது என இப்படி தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் மனுக்களாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. மேலும் நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கும் மறுப்பு தெரிவித்தது. இது தொடர்பாகப் தேசிய தேர்வு முகமையின் டிஜி சுபோத் குமார் சிங் தெரிவிக்கையில், “நீட் தேர்வு முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும். தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். நீட் தேர்வு நடைபெற்ற 4 ஆயிரத்து 750 மையங்களில் 6 தேர்வு மையங்களில்தான் முறைகேடு தொடர்பாக பிரச்சனை நடந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. 

Matter related to NEET examination Supreme Court action order

இந்தப் புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதன்படி யூ.பி.எஸ்.சி. (UPSC) முன்னாள் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை வழங்கும். 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் சுமார் 1600 மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. வினாத்தாள் கசிவு எதுவும் நிகழவில்லை. நீட் தேர்வின் முழு செயல்முறையும் மிகவும் வெளிப்படையானது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (13.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் “நீட் கவுன்சிலிங் தொடரும். நாங்கள் அதை நிறுத்த மாட்டோம். தேர்வு முடிந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதனால் பயப்பட ஒன்றுமில்லை” எனத் தெரிவித்துள்ளது. 

Matter related to NEET examination Supreme Court action order

முன்னதாக, “நேர இழப்பை ஈடுகட்ட கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) பெற்ற 1,563 பேரின் முடிவுகளை மதிப்பாய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் அட்டைகளை ரத்து செய்ய குழு முடிவு எடுத்துள்ளது. 1,563 மாணவர்களுக்கான மறுதேர்வு குறித்த விவரம் இன்றே அறிவிக்கப்படும். அந்த தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடத்தப்படும். இதற்கான முடிவுகள் ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும். ஜூலையில் கவுன்சிலிங் தொடங்கும் என்றும் தேசிய தேர்வு முகமை (NTA - என்.டி.ஏ.) அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்தது.