2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 2013 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து அந்த மனுவின் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த மனுவை தற்பொழுது உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கை சந்திக்குமாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.