local body election supreme court state election commission

Advertisment

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று (20/09/2021) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, "நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா? நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஏழு மாதம் கூட தேவையில்லை; நான்கு மாதம் போதும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏழு மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது" என்று கூறிய நீதிபதிகள், தேர்தலை நடத்த அவகாசம் கேட்பது பற்றி இரண்டு நாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.