Advertisment

நாள்தோறும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்படுகிறதா?-பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Supreme Court question to firecracker makers!

'அரசியல் கூட்டங்கள்,இல்ல விழாக்கள்,மதரீதியிலானவிழாக்களில்தடை செய்யப்பட்டபட்டாசுகளைவெடிப்பதைக்காணமுடிகிறது. தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை இந்த விழாக்களில் வெடிக்கிறார்கள் என்றால் அதற்கான பட்டாசுகளை ஏன் தயாரிக்கிறீர்கள்'எனப்பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

வரப்போகும் பண்டிகை நாட்களில் மிகவும்குறிப்பிடத்தக்கப்பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுவெடிப்பதற்கானநேரத்தைகாலை மாலை என இரு வேளைகளிலும் தலா 4 மணி நேரம் அதிகரிக்க வேண்டும்எனத்தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில்மனுத்தாக்கல்செய்திருந்தது. இந்த மனு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.

Advertisment

பட்டாசுவெடிக்கத்தடை விதிக்கக் கோரிய தரப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், பட்டாசுதயாரிக்கப்பேரியம்ஆக்சைடைபயன்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐந்து பட்டாசுகள் மட்டுமே பசுமைபட்டாசாகத்தயாரிக்கப்படுகிறது. ஆனால் 300க்கு மேற்பட்ட ரகங்கள் விதிமுறைகளை மீறி உற்பத்தி செய்யப்படுகிறதுஎனத்தெரிவித்தார். இதன்பிறகு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், நீண்ட நேரம் வெடிக்கக்கூடியசரவெடிகளைத்தயாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் அரசியல் கூட்டங்கள், திருமணங்கள், மதரீதியான நிகழ்ச்சிகளில் அந்த தடை செய்யப்பட்ட பட்டாசுதான்அதிகமாகவெடிக்கப்படுகிறது. அப்பொழுது நாள்தோறும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்படுகிறதா என நீதிபதிகள், கேள்வி எழுப்பினர்.இதற்குப்பதிலளித்த பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பினர், சிறிய அளவிலானபட்டாசுகளைத்தான் நாங்கள் தயாரிக்கிறோம். பொதுமக்கள் தான் அதை ஒன்றாக இணைத்து பெரிதாக மாற்றிக் கொள்கின்றனர்எனக்கூறினர். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏன்விதிமுறைக்குப்புறம்பாகத்தடை செய்யப்பட்டபட்டாசுகளைஉற்பத்தி செய்கிறீர்கள்எனத்தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

crackers diwali Festival supremecourt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe