Advertisment

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

 Supreme Court  judgment today in the hearing of the petition against Jallikattu

Advertisment

ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட மாடுகள் மூலம் நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக விலங்குகள்நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் அமர்வு தொடர் விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்றும், காளைகளை வற்புறுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர் என்றும் விலங்குகள் நல அமைப்புகளால்வாதிடப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு.பாரம்பரியம், இறை வழிபாடு அம்சங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததால் விலங்குகள் நல அமைப்புகளின்மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.

Advertisment

இப்படி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அமர்வு வழக்கின் தீர்ப்பை இன்று அறிவிக்கவுள்ளது.

jallikattu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe