சென்னை சேலம் எட்டு வழிச் சாலை தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
சேலம் எட்டு வழிச் சாலைக்கு விவசாயிகள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, இந்தத் திட்டத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தச் சுற்றுச் சூழல் முன்னனுமதி தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.