Advertisment

ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

Supreme Court has stayed the ruling that OP Ravindranath election was void

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனி பாராளுமன்றத்தொகுதி வாக்காளர்மிலானிஎன்பவர் 2019 ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத்தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில், “ஓ.பி.ரவீந்திரநாத்தேர்தலின் போது அதிகார துஷ்பிரயோகம் செய்தல், வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்தல், வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்தல், வங்கிகளில் பெற்ற 10 கோடிரூபாய்கடனை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தல், தேர்தலின் போதுவாக்காளர்களுக்குபணப்பட்டுவாடா செய்தது, இது குறித்தபுகாரைதேர்தல் அதிகாரிகள் வாங்க மறுத்தல், வாக்கு பெட்டியை மாற்றியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன” என பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் வழங்கிய தீர்ப்பில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட்டு இருந்தார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்குத் தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்திருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.ரவிந்திரநாத்மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்குவழக்குவிசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமந்த்தின் தீர்ப்புக்குஇடைக்காலத்தடை விதித்து, ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe