Supreme Court grants conditional bail to former minister Rajendra Balaji

Advertisment

பண மோசடி செய்ததாக, அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடுக்கப்பட்ட வழக்கில், அவருக்கு நான்கு வார கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான அவர், கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால், அவரை கைது செய்தாகவேண்டிய நிலை ஏற்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், ராஜேந்திர பாலாஜி மீது நேரடியாக எந்த இடத்திலும் குற்றச்சாட்டு இல்லாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதால், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்றும், அவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார்கள் ஜோடிக்கப்பட்டவை என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும், வெளியூர்களுக்கு எங்கும் செல்லக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதித்தனர்.

Advertisment

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.