Supreme Court grants bail to Perarivalan

Advertisment

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

விடுதலைகோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பரோலில் வெளியே வந்தபோது அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், சில நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளனர்.