சென்னை தியாகராய நகரின் உஸ்மான் சாலையில் இருந்த 'சென்னை சில்க்ஸ்' நிறுவனத்தில்கடந்த 2017 ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Advertisment

Chennai Silks

2017ல் அந்த தீ விபத்திற்குப் பின் அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளை சென்னை சில்க்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. அந்த புதிய கட்டிடமானது விதிமுறைகளை மீறி கட்டப்படுவதால் அதற்கு தடை விதிக்கவேண்டும் என கண்ணன் என்பவர் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதில் சிஎம்டிஏ, தமிழக தீயணைப்பு மீட்பு துறை, தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை சில்க்ஸ் நிர்வாகம் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இதில் மனுதாரர் கண்ணன் சார்பில் ஸ்வர்ணம் ஜே.ராஜகோபாலன் வழக்கறிஞராக ஆஜரானார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பாஸ்கரன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்த நவம்பர் 14 ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜனவரி 3 ஆம் தேதி கண்ணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

கடந்த 5 ஆம் தேதி இந்த வழக்கை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் விசாரணையை மேற்கொண்டனர். இதில் மனுதாரர் தரப்பில் அனிஷ் ஆர். ஷாவும், எதிர்மனுதாரர்கள் தரப்பில் ராகேஷ்.கே.ஷர்மாவும் வாதாடினர்.

இதில் நடைபெற்ற விசாரணையை கொண்டு வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என கூறி 'சென்னை சில்க்ஸ்' கட்டிடம் கட்ட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.