Advertisment

பேனர் வைக்க தடைகோரிய ட்ராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி

விதிமீறி வைக்கப்பட்டபேனர் விபத்துக்களில்கோவையில்ரகு என்ற இளைஞரும், சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற ஐடி பெண் ஊழியரும் உயிரிழந்தநிலையில் தடையை மீறி பேனர் வைக்கக்கூடாது என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், நீதிமன்றமும் கருத்து தெரிவித்திருந்தது.

Advertisment

The Supreme Court dismissed traffic Ramasamy's petition for banning the banner

ஆனால் அண்மையில் தமிழகத்தில் சீன அதிபர் வருகைக்காக தமிழக அரசு பேனர் வைக்க நீதிமன்றத்தில்சிறப்பு அனுமதிகோரி மனுதாக்கல் செய்து அனுமதியையும் பெற்றது. ஆனால் விதி மீறிபேனர் வைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு நல்ல தீர்வை வழங்கவேண்டும் எனவும், தமிழக அரசு பேனர் வைப்பதற்கு பெற்றிருக்கும் சிறப்பு அனுமதியை தடைசெய்யவேண்டும் இல்லையெனில் இது மற்ற அரசியல் கட்சியினருக்கு தவறான முன் உதாரணமாக அமையும் எனவும் ட்ராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பேனர் வைக்கலாமா இல்லையாஎன்பது அரசின் உரிமை சார்ந்த முடிவு அதில் தலையிட முடியாது.இந்த வழக்கிற்குஅடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறிட்ராபிக் ராமசாமியின் மனுவைதள்ளுபடி செய்தது.

supremecourt trafic ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe