Advertisment

அமெரிக்க இளைஞருடன் காணொளி மூலம் திருமணம் ; உயர்நீதிமன்றக் கிளை அனுமதி! 

Supreme Court allows marriage with American youth through video!

அமெரிக்க இளைஞருடன் தமிழக பெண் காணொளி மூலம் திருமணம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வம்சி சுதர்சினி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மூன்று சாட்சிகள் முன்னிலையில் மனுதாரர் தனது தரப்பிலும், திருமணம் செய்துகொள்ள போகும் ராகுல் தரப்பிலும், திருமணப் பதிவு புத்தகத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர், சட்டப்படி திருமண பதிவுச் சான்றிதழைச் சார் பதிவாளரிடம் வழங்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisment

அமெரிக்க குடியுரிமைப் பெற்ற ராகுல், விடுமுறையில் கன்னியாகுமரி வந்துள்ளார். அப்போது, அவரும் வம்சி சுதர்சினியும் சிறப்பு திருமண சட்டத்தின் படி, திருமணம் செய்துகொள்ள விண்ணப்பித்தனர். சார் பதிவாளர் உரிய காலத்தில் முடிவெடுக்காததால் ராகுல் அமெரிக்கா சென்றார்.

இதனால் காணொளி மூலம் திருமணம் செய்துக் கொள்ள அனுமதிக் கோரி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

couple marriage
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe