சேலம் பாலமலையின் கண்ணாமூச்சி பிரிவு முதல் கீமாம்பட்டி கிராமம் வரை சாலை அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 7 கிலோமீட்டர் சாலை அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை அடுத்து உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து சாலை அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 940 மரங்கள் வெட்டப்பட இருக்கிறது. இதற்கு பதிலாக அப்பகுதியில் புதிய மரக்கன்றுகளை அதிக அளவில் நடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலத்தில் சாலை அமைப்பதற்காக 940 மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் அனுமதி
Advertisment