Advertisment

தமிழகத்தின் தலைமகனே நீ மரணிக்கவில்லை... விதைக்கப்பட்டிருக்கிறாய்...

காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானவர்களில் தூத்துகுடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தின் கணபதி -மருத்தாத்தாள் தம்பதியரின் கடைசி மகன்தான் சுப்பிரமணியன். சிஆர்பிஎப் தேர்வுக்கு பிறகு சிஆர்பிஎப்பில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். 28 வயதே ஆன இந்த இளைஞர் உத்திரபிரதேசத்தில் இரண்டு வருட பயிற்சிக்கு பின்னர் காஷ்மீர் அனுப்பப்பட்டார். அங்கே பணியில் இருந்த போதுதான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. இதில் பலியான 41 வீரர்களின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டுவரப்பட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இன்று காலை 7 மணி அளவில் ராணுவத்தின் தனி விமானத்தில் தமிழக வீரர்கள் இருவரின் உடல்கள் ஏற்றப்பட்டு மதியம் 12 மணி அளவில் திருச்சி வந்த அந்த விமானத்தில் அரியலூர் வீரர் சிவச்சந்திரன் உடல் இறக்கப்பட்டது அதன்பின்தனி விமானத்தில் சுப்பிரமணியன் உடல்மதுரைக்கு வந்து அவரது சொந்த ஊரான சவாலாப்பேரிக்கு ராணுவ டிரக்கில் வந்து சேர்ந்தது. முறைப்படி அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சுத்துப்பட்டு கிராமத்த்தினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கிராமமக்கள் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனை அடுத்து அவரது உடல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisment

இறுதி அஞ்சலியில் அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய மாநில அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். சுப்பிரமணியனின் உடலை சிஆர்பிஎப்பின் டிஐஜி தலைமையிலான படையினர் கொண்டுவந்தனர். அடக்கத்திற்கு முன்பாக ராணுவ மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. அதன்பின் அவர் உடல் மீது போற்றப்பட்டிருந்த தேசியக்கொடிமுறைப்படி அவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணீர் சிந்தி கதறி அழுத அவர் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு அவரது உடல் ராணுவத்தால் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மணி மாலை 6.30.

attacked indianarmy.
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe