தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன்உடல் முழு அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவப் படை வீரர் தூத்துக்குடியைசேர்ந்த சுப்பிரமணியன்உடல் இன்று சொந்த ஊரான சவலாப்பேரிக்கு கொண்டுவரப்பட்டு அவரதுஉடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் மற்றும் பலர்அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இந்நிலையில் வீரர் சுப்பிரமணியனின்உடல் 21 துப்பாக்கிகுண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியில்அடக்கம் செய்யப்பட்டது.