சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்து உள்ளார்.
கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் குணமானதையடுத்து இன்று காலை சென்னை திரும்ப பெங்களூருவில் இருந்து கிளம்பி உள்ளார். காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தை தொடங்கி அவர் கடந்த 2 மணி நேரமாக தமிழக எல்லையை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளார். இன்னும் 30 நிமிடங்களில் அவர் தமிழக எல்லையை அவர் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக எல்லையில் அமமுகவினர் திரளாக குவிந்துள்ளனர். ஏராளமான பெண்கள் சசிகலாவுக்கு முளைப்பாரியுடன் மரியாதை செய்ய சாலையில் நின்றுகொண்டு உள்ளார்கள். இதன் காரணமாக எல்லையில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.