Advertisment

போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக  சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரள்வோம்!  தமிழ்த்தேசியப் பேரியக்கம்

ttk

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

’’உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி - தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்த பல்லாயிரக்கணக்கான மக்களை காவல்துறை வழிமறித்துத் தாக்கியதுடன், ஒரு பெண் உட்பட 13 பேரை இதுவரை துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையினர் கொன்றிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இந்த வன்முறைத் தாண்டவத்தைக் கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நாளை (23.05.2018) காலை 11 மணிக்கு, சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தோழமை அமைப்புகளும், உழவர் இயக்கங்களும் பங்கேற்கின்றனர்.

Advertisment

அவசரமாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் மக்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டு, போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்ப வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!’’

Valluvar Kotham Chennai Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe