Skip to main content

உடைந்த கொள்ளிடம் பாலத்தின் சீரமைப்பு வேலையை சீர்குலைக்கும் அமைச்சரின் ஆதரவாளர்கள்..!

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
K_lorry (1)


கடந்த 15 நாட்களுக்கு முன்பு காவிரியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் தண்ணீர் வேகத்தை குறைப்பதற்காக கொள்ளிடம் அணையை மூட முயற்சிக்கும் போது கொள்ளிடம் அணை உடைந்து. இதை சீரமைப்பதற்காக 90 லட்சம் ரூபாய் உடனடியாக ஒதுக்கி சீரமைப்பு பணியை துவக்கி வைத்தார்கள் லோக்கல் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், மற்றும் வளர்மதி. இவர்கள், உடைந்த கொள்ளிடம் பாலத்தில் அரசலூர் பாலு என்பவர் 65 லாரிகளை வைத்து கொண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பம் முதல் பணி செய்து வந்தார்கள்.

இடையில் லோக்கல் அமைச்சர்களின் வேலையும், அதை துரிதப்படுத்தும் பணி கொஞ்சம் தொய்வாக இருப்பதை உணர்ந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் உடைந்த அணையை பார்வையிட வந்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உடைந்த பாலத்தை சீரமைக்கும் பணி மந்தமாக நடைபெறுகிறது. 40 சதவீகித பணிகள் கூட முடியவில்லை என்று ஒரே போடாக போட.. இதனால் அதிர்ச்சியடைந்தார் முதல்வர் எடப்பாடி.
 

K_lorry (1)



கரூர் போக்குவரத்து துறை அமைச்சரை உடனே களத்தில் இறக்கி பாறைகளை கொண்டு வரும் பொறுப்பை ஓப்படைத்தார். இதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி உத்தரவின் பெயரில் போக்குவரத்து துறை அமைச்சரின் கரூர் விஜயபாஸ்கருக்கு வேண்டப்பட்ட ஒப்பந்தகாரர். கடந்த சில நாட்களாக உடைந்த கொள்ளிடம் அணையை பாறைகள் அடைக்கும் வேலையை செய்து வந்தார்.

இந்த நிலையில் தீடீர் என இரவு நேரத்தில் பாறைகளுக்கு இடையில் மண் கொட்டும் பணிநடைபெற்றது.

ஆரம்பத்தில் ஒப்பந்தகாரான அரசலூர் பாலுவிடம் வேலை பார்க்கும் கண்ணன் என்பவர். மண் கொட்டும் பணியில் ஈடுபட்ட போது அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரான ரவி சரவணன் ஆகியோர் நான் சொல்லும் இடத்தில் தான் மண் கொட்ட வேண்டும் என்று கண்ணனிடம் தகாராறு செய்தனர்.
 

K_lorry (1)


இவர்களுடைய தகராறு எந்த ஏரியாவையே அதிர செய்தது அப்போது அங்க இருந்த பொது பணித்துறை உயர் அதிகாரி ஏன் இப்படி பிரச்சனை பண்றீங்க என்று கேட்ட போது… அவரை தரகுறைவாகவும் ஒருமையிலும் அமைச்சரின் ஆதரவாளர்கள் திட்ட ஆரம்பித்தனர்..

பொதுபணித்துறை உயர்அதிகாரியை திட்டியதால் இரவு பணியில் இருந்த உதவி பொறியாளர்கள் ஆத்திரமடைந்தனர். அப்போது ஒப்பந்தகாரர் அரசலூர் பாலு என்பவர் தன் பணியாளர்களை பணியை நிறுத்த சொல்லி விட்டு வீட்டிற்கு திரும்பி விட்டார்.

இந்த தகவல் தன் ஆதரவாளர்கள் மூலமாக அமைச்சருக்கு தெரிய வரவே, அவர் உடனடியாக தலையிட்டு முதலமைச்சரின் நேரடி பார்வையில் நடைபெறுகிறது. இதனால். தன் ஆதரவாளர்களக பணியில் இருந்து விலக்கி கொள்வதாக கூறியதை தொடர்ந்து பல மணி நேரம் நின்ற வேலை மீண்டும் தொடங்கியது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் நடந்த சோகம்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
3 people lost their lives in Kollidam river

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரது மகன்கள் சந்தோஷ்(13), சந்திரன்(10). இருவரும் தங்கள் வீட்டிற்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்களின் பிள்ளைகள் சுமார் 10 பேருடன் நேற்று காலை திருமானூர் கொள்ளிடம் ஆற்றிற்குச் சென்று குளித்துள்ளனர். இந்த நிலையில், சிறுவர்களில் சிலர் புதை சூழலில் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்ற மற்ற சிறுவர்கள் முயன்றுள்ளனர். அப்போது 10 சிறுவர்களும் சூழலில் மாட்டிக்கொண்டனர்.

இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், மீனவர்கள், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவர்களில் 7 பேரைக் காப்பாற்றினர். ஆனால் மூன்று பேரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து உடனடியாக அரியலூர் திருவையாறு தீயணைப்புத் துறையினருக்குத்  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியைத் தொடங்கிய தீயணைப்பு வீரர்கள் ஆற்றுப் பகுதியில் பல மணி நேரம் தேடிய பிறகு 3 பேரில் அம்பத்தூரை சேர்ந்த தீபக்(17), தஞ்சாவூரை சேர்ந்த பச்சையப்பன் ஆகிய இருவரின் உடலை மீட்டனர். 

இரவு நேரம் நெருங்கிவிட்டபடியால் இன்று காலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் குழுவினர் இணைந்து மீண்டும் தேடினர். அதில் இன்று காலை மூன்றாவது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்த இளம்பிள்ளைகள் கொள்ளிடம் ஆற்றுச்சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

ரயில் படிக்கட்டில் பயணம்; மணல் பரப்பில் சடலமாக கிடந்த இளைஞர்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

 Travel on the train stairs; A young man lying on the sand

 

ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பாபநாசம் செல்வதற்காக ஏறிய இளைஞர் ஒருவர் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். சீர்காழிக்கு முன்பாக கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்த பொழுது படிக்கட்டில் அமர்ந்து கொண்டு இருந்து பயணம் செய்த அந்த இளைஞர் தடுமாறி கீழே விழுந்தார். ஆனால் யாரும் கவனிக்காமல் விட்டனர். திடீரென உடன் வந்தவர்கள் தங்களுடன் வந்த இளைஞரை காணவில்லை என மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் பகுதிக்குச் சென்று பார்த்தபோது ஆற்றின் மணல் பரப்பில் இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருநெல்வேலியை சேர்ந்த அப்பாஸ் என்பது தெரியவந்தது.