publive-image

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக, அவர்களது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகளின் நேற்று (09/07/2022) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Advertisment

அ.தி.மு.க. ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆணடிப்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் ஆகியோர் தலைமைத் தாங்கினர். கூட்டத்தில் கலந்துக் கொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Advertisment

இ.பி.எஸ்தான் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், ஓ.பி.எஸ்.தான் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அ.தி.மு.க. கட்சியும், இரட்டை இலை சின்னமும் யார் வசம் செல்கிறதோ அவர்களுக்கு ஆதரவு வழங்கவும், அவர்கள் வழியில் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.