ADVERTISEMENT

சுற்றி திரிபவர்கள் மீது வழக்கு... ஈரோடு எஸ்.பி. தகவல்

07:57 PM Mar 25, 2020 | rajavel

ADVERTISEMENT


வாழ்வதற்கு வீட்டில் தனிமையில் இருப்பது ஒரே வழி என்பதையும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதையும் எவ்வளவு சட்டம் இயற்றினாலும் மக்கள் மத்தியில் சில நபர்கள் சம்பந்தமில்லாமல் ஊரை சுற்றுவதும் வாகனத்தில் செல்வதும் ஒவ்வொரு நகரத்திலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ADVERTISEMENT

இதை கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை பல்வேறு வடிவங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஈரோட்டில் சில இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் நகரை வலம் வந்ததும், அதை காவல்துறையினர் தடுத்து எச்சரிக்கை செய்து அனுப்பியதும் நடந்தது.



இந்நிலையில் இந்த வைரஸ் தாக்கத்தின் தீவிரத்தை உணராமல் சில நபர்கள் சுற்றி திரிவதை தடுத்து நிறுத்த ஈரோடு மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் மாவட்ட போலீசாருக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து உள்ளார்.

அதன் அடிப்படையில் இரு சக்கர வாகனத்தில் சம்பந்தம் இல்லாமல் வெளியே வந்த 80 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அத்தியாவசிய பொருள் இல்லாத வகையில் இருக்கும் கடைகள் திறந்து இருந்த 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நாளை மற்றும் ஒவ்வொரு நாளும் மிகவும் தீவிரமாக கடைபிடிக்க படும் என ஈரோடு எஸ்பி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT