Advertisment

தொழிலாளர்களுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை குறித்து பரிசீலிக்கப்படும் - சந்தோஷ்குமார் கங்வார்

Santosh Kumar Gangwar

Advertisment

புதுச்சேரி முதலியார்பேட்டையில் ரூ.6.41 கோடி செலவில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் மண்டல அலுவலகம் புதுப்பிக்கப்பட்டது. அதை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், "12 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டு துவங்கப்பட்ட தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் மண்டல அலுவலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 5 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு கோடி தொழிலாளர்களுக்கு ESI, EPF நிதி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 200 கோடி ரூபாய் செலவில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை துவங்க புதுச்சேரி அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு தேவையான இடம் கொடுத்தால் பரிலிக்கப்படும் " என்றார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுச்சேரியில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க ஐந்தரை ஏக்கர் நிலம் தேவை, இதனை அளிக்க அரசு உறுதியளித்திருப்பதால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

விழாவில் புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி, பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் தலைமை இயக்குனர் ராஜ்குமார், மண்டல இயக்குனர் தாசு ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து வரவேற்றார்.

Santosh Kumar Gangwar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe