Advertisment

ஓய்வு பெறும் நாளில் போக்குவரத்து அலுவலர் திடீர் பணியிடை நீக்கம்

supended of Transport Officer on the day of retirement

Advertisment

சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர், ஓய்வு பெறும் நாளில் திடீரென்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலராக (ஆர்டிஓ) பணியாற்றி வந்தவர் கல்யாணகுமார். இவர்கடந்த மே 31 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்தார்.

இந்நிலையில், அவர் திடீரென்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவர், மதுரையில் பணியாற்றி வந்தபோது, போலி ஓட்டுநர் உரிமம் வழங்கியதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடையாத நிலையில் உள்ளதால், அவரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தர்மபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வரும் தாமோதரன், சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்துஅலுவலர் பணிகளையும் கூடுதலாக கவனிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது.

suspended police Bribe Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe