Advertisment

தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர்! 

Sunday Lockdown Police under intense surveillance!

Advertisment

தமிழ்நாட்டில்கரோனாமற்றும்ஒமிக்ரான்தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில்,அதனைகட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறுகட்டுப்பாடுகளைவிதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இன்று பொது போக்குவரத்து,மெட்ரோரயில் சேவைகள் இயங்காது. உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரைபார்சல்சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவுடெலிவரிநிறுவனங்களுக்குகாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி. இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. இன்றும், வார இறுதி நாட்களிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான மின்சார இரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவலர்களிடம் அவசியம்பயணசீட்டைக் காட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு முடக்கம் காரணமாக இன்று தமிழ்நாடு முழுக்க 60,000போலீஸார்பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.

lockdown sunday
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe