Advertisment

ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கினை அமல்படுத்தும் உத்தரவை எதிர்த்து வழக்கு!

chennai high court

Advertisment

ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தளர்வில்லா முழு ஊரடங்கினை அமல்படுத்தும் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கஅறிவிக்கப்பட்ட ஊரடங்கை, சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை நீட்டித்த தமிழக அரசு, மாநிலங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணிக்க இ-பாஸ் பெற வேண்டும் எனவும், இம்மாதம், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்த மனோகரன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணிக்க பாஸ் பெறத் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் வகையில், தமிழக அரசின் உத்தரவு உள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் பொது மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதால், முந்தைய நாளான சனிக்கிழமைகளில் கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்துவிடுவதால், தனிமனித இடைவெளி என்பது அர்த்தமற்றதாகி விடுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

chennai high court lockdown sunday
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe