Advertisment

ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணி வரை மெட்ரோ ரயில் சேவை!

sunday chennai metro train service

நாளை (18/07/2021) முதல் ஞாயிறுதோறும் காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும், மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (18/07/2021) முதல் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசுப் பொது விடுமுறை நாட்களில் காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இயக்கப்படவுள்ளன.

Advertisment

மெட்ரோ ரயில் சேவைகள் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 05.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவைகள் நெரிசல் மிகு நேரங்களில் (Peak Hours) காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் (Non- Peak Hours) 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூபாய் 200 வசூலிக்கப்படுகிறது. கடந்த 21/06/2021 முதல் நேற்று (16/07/2021) வரை முகக்கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 46 பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூபாய் 9,200 வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

service metro train Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe