Advertisment

“சூரியன் மக்களை வதைக்கிறது!” - வெயில் சூட்டை ஒப்பிட்ட ராஜேந்திர பாலாஜி!

Advertisment

விருதுநகர் மாவட்டம் – சிவகாசியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ரத்ததான முகாம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி “மேடைக்கு முன்பாக வெயிலில் நீங்கள் காய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

சூரியன் மக்களை வதைக்கிறது. அதனால்தான், நாங்களும் திறந்தவெளி மேடையில் நின்று வெயிலின் கொடுமையை அனுபவிக்கிறோம். சூரியன் ஏற்படுத்தும் கஷ்டத்தை உணர்ந்தால்தானே, அதிலிருந்து விடுபடுவதற்கு உரிய ஆயத்தப்பணிகளை, நாங்களும் செய்ய முடியும்? இந்தத் துன்பத்திலிருந்து மக்களை மீட்க வேண்டும். திமுக ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் தினந்தோறும் போராட்டம் நடத்துகிறார்கள்.

அதிமுக,மக்களை நம்பியேதேர்தலில் களம் காண்கிறது. திமுகவோ,கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு மதிப்பு உயர்ந்துள்ளது. வெற்றி அருகில் வந்துவிட்டது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியின் சீர்கேடுகளைச் சொல்லியே வாக்கு சேகரிக்கவேண்டும். அப்போது, பட்டாசுத் தொழில் பிரச்சனை, நெசவாளிகள் பிரச்சனை, அரசு ஊழியர்கள் பிரச்சனை என்றுபல்வேறு பிரச்சனைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. அதனால், டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியின் கரம் ஓங்கும். தமிழ்நாட்டின் நலன் காக்க,அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராடுவார்கள்.அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

admk elections parliment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe