Skip to main content

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்; எம்.பி ரவீந்திரநாத்திற்கு சம்மன் 

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Summons has been sent to MP Ravindhranath

 

தேனி மாவட்டத்தில் உள்ள  பெரியகுளம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள எம்.பி.ரவீந்திரநாத்திற்குச்  சொந்தமான தோட்டத்தில் உள்ள வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது.

 

இது தொடர்பாக தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் என மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

 

மேலும் தோட்ட உரிமையாளரான ரவீந்திரநாத் எம்.பி. உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், ரவீந்திரநாத் எம்‌.பி மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகருக்கு கடந்த வாரம் தேனி மாவட்ட வன அலுவலர் கடிதம் அனுப்பியிருந்தார்.

 

இந்த நிலையில்  சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு  ரவீந்திரநாத் எம்.பிக்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இரண்டு வாரத்திற்குள் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளதாக தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா தகவல் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயன்ற இளைஞர் கைது!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
police action for Youth who tried to enter the vote counting center 

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது கடந்த 27 ஆம் தேதி (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்று முன்தினம் (28.04.2024) நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் நேற்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. அதோடு ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எந்திரங்கள் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவுக்கான தொலைக்காட்சியில் இன்று (30.04.2024) காலை 9 மணியளவில் பழுது ஏற்பட்டது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களால் சில நிமிடங்களில் இந்த பழுது சரி செய்யப்பட்டது. 

police action for Youth who tried to enter the vote counting center 

இதற்கிடையே தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தேனி கொடுவாரூரியில் உள்ள கம்மவார் சங்கம் கல்லூரி அருகில் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கல்லூரி வளாகத்திற்குள் ராஜேஷ் நேற்று (29.04.2024) இரு சக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியபோது காவலர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ. மதுக்கண்ணன் அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணன் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும், அதிமுக சார்பில் வி.டி. நாராயனசாமியும், பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்  அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும், நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபாலும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.