நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைநேரில்ஆஜராகும்படிதூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து விசாரித்து வரும் ஒரு நபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisment

summon to seeman

கடந்த வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி கடற்கரை சாலையிலுள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றார்.

Advertisment

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தில் பேசியதால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் ஆஜராகும்படிசம்மன் அனுப்பியுள்ளது ஒரு நபர் விசாரணை ஆணையம். அதேபோல் கடந்த ஆண்டுமே 22 ஆம் தேதி திமுக சார்பில் பேரணி நடைபெற்றது.புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியைநாலம்கேட் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். திமுக பேரணியை முன்னின்று நடத்திய எம்எல்ஏ கீதாஜீவனுக்கும் விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியுள்ளது ஒரு நபர் விசாரணை ஆணையம்.