Advertisment

நக்கீரன் ஆசிரியருக்கு சம்மன்!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நக்கீரனில் வெளியிட்டது தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர்நாளை (15-03-2019) காலை 11 மணிக்கு சென்னை பழைய கமிஷனர் அலுவலத்தில் ஆஜராகுமாறுமத்தியக்குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisment

nakkheeran gopal

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரத்தை வெளிக்கொண்டுவந்து நக்கீரன் ஆசிரியர் பேசிய வீடியோ தமிழகம் எங்கும் பரவியது. இந்த வீடியோவில் நக்கீரன் ஆசிரியர் குற்றத்தில் தொடர்புடையவர்கள் குறித்தும், அவர்களுக்குள்ள அரசியல் பின்னணி குறித்தும் உறுதியாக வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது.நக்கீரன் பத்திரிகையிலும் இதுகுறித்த விரிவான கட்டுரைகள் வெளியாகி இருந்தன.

Advertisment

police pollachi sexual abuse nakkheeran gopal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe