Advertisment

ஆறுமுகநாவலர் பள்ளி சார்பில் கோடைகால சிறப்பு விளையாட்டு நிறைவு பயிற்சி முகாம்

Summer special sports competition training camp organized by Arumuga Navalar School

சிதம்பரம் சின்ன மார்க்கெட் அருகே உள்ள ஆறுமுக நாவலர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால பள்ளி விடுமுறை நாட்களில் மாணவ மாணவிகள் தவறான எண்ணங்களும், செயல்பாடுகளும் செல்லாத வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோடைகால சிறப்பு விளையாட்டு இலவச பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு பயிற்சி முகாம் பள்ளி விடுமுறை நாளான மே 1-ந்தேதியிருந்து தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற்று நிறைவு பெற்றது. இதில் மாணவர்களுக்கு வாலிபால், கூடைப்பந்து, சிலம்பம், பேஸ்கட்பால், கபடி, பாரம்பரிய வீர விளையாட்டுகள், சுருள், தீப்பந்தம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisment

இதனை தொடர்ந்து விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆறுமுக நாவலர் சைவபிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழு செயலாளர் மருத்துவர் அருள்மொழி செல்வன் தலைமை தாங்கினார். பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் யோகா பயிற்சி மைய இயக்குனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு உடற்பயிற்சியின் அவசியத்தை பற்றி விளக்கி கூறினார். மேலும் விடுமுறை காலத்தில் சில மாணவர்கள் விடுமுறையை கொண்டாடும் வகையில் ஏரி, குளம் உள்ளிட்ட பகுதிக்கு சென்று விபரீதம் ஏற்படுகிறது இது போன்ற பயிற்சிகள் நடைபெறுவதால் மாணவர்களின் நலம் மேம்படுகிறது என்று பேசினார்.

Advertisment

ஆறுமுகநாவலர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார், முகாமில் பங்கேற்ற 35 மாணவர்களுக்கு இலவசமாக டி-ஷர்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பயிற்சி அளித்த அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை ஆசிரியர் 10 பேருக்கு பள்ளியின் செயலாளர் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜ், பள்ளி குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், முருகையன். பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பயிற்சியில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் காலை, மாலை இரு வேலையும் பால் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது. இதில் சிதம்பரம் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Chidambaram school students
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe