Advertisment

வாழை நட்ட ஏழையை கரையேற்றவிடாத கோடை மழை

வாழை, ஏழையை கரையேற்றும் என்பார்கள் கிராமத்தில். ஆனால், இரவெல்லாம் வீசிய சூறாவளி காற்றால் வாழைகள் ஒடிந்து கீழே விழுந்து ஏழை விவசாயிகளை கண்ணீர் விடவைத்துள்ளது.

Advertisment

banana

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

திடீர் திடீரென கோடை மழை வேலூர் மாவட்டத்தில் பெய்து வருகிறது. அதன்படி ஏப்ரல் 30ந் தேதி நள்ளிரவு முதல் மே 1ந் தேதி விடியற்காலை வரை வீசிய கடும் காற்றால் வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் மாதகடப்பா பகுதியில் இருக்கும் விவசாயி செல்வகுமார் என்பவரின் 3.5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 400 வாழை மரங்கள் சூறாவளி காற்றால் கீழே விழுந்து பெரும் நட்டத்தை அவருக்கு உருவாக்கியது.

Advertisment

ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் அடுத்த ராமு செட்டி குப்பம் சாமி (எ) சுப்பிரமணி (65), என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 150 வாழை மரங்கள் சேதமடைந்தன. அதேபோல், ராமசெட்டிகுட்டை பகுதியில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் அதே பகுதியை சேர்ந்த விவசாயி நிர்மலா, செல்வம், சுப்பிரமணி, வேலு, கம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த சாந்தி, புருஷோத்தமன், சீனிவாசன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த 3000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முற்றிலுமாக கீழே விழுந்து பெரும் சேதத்தை உருவாக்கியுள்ளது.

இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் தெரிவிக்க அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று சேதமடைந்த பயிர், மரங்களை பார்வையிட்டு சென்றனர். கடந்த காலங்களில் மழை, காற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மரங்கள் விழுந்தால், வீடுகள் சேதமடைந்தால் அதிகாரிகள் வரமாட்டார்கள். இப்போது வந்துள்ளார்கள், அவர்கள் எங்கள் நிலையை கவனத்தில் கொண்டு உண்மையான ஆய்வறிக்கையை தந்து, நட்டயீடு வாங்கி தந்தால் நன்றாகயிருக்கும் என்கிறார்கள் ஏழை விவசாய மக்கள்.

banana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe