கோடைவெயிலின் தாக்கம் கோடியக்கரை வனவிலங்குகளையும் விட்டுவைத்திடவில்லை. வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து, வனவிலங்குகள் தண்ணீருக்காக அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாகை மாவட்டம், வங்ககடலோரம் உள்ள வேதாரன்யம் கோடியக்கரையில் 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காடுகள் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குரங்கு குதிரை, உடும்பு, மயில், காட்டுப்பன்றி என பல்வேறு வனவிலங்குகள் இருக்கின்றன. அங்கு தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிலையே உறுவாகியுள்ளது. இந்த சரணாலயத்தில் 56 இடங்களில் இயற்கையான குளங்களும், சிமெண்டால் செயற்கையாக 17 இடங்களில் கட்டப்பட்ட தொட்டிகளும் உள்ளன. இருந்தபோதிலும் வனத்துறை அதிகாரிகள் கடமைக்கும், கணக்கிற்கும் தினசரி ஒரு டேங்கர் தண்ணீர் கொண்டுவந்து தொட்டிகளில் விடுகின்றனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதுகுறித்து கோடியக்கரை சமுக ஆர்வலர்ஒருவர் கூறுகையில், " வழக்கமாக இந்த காட்டுப் பகுதியில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 120 சென்டிமீட்டர் மழை பெய்யும். ஆனால் சென்ற ஆண்டைவிட மிக மிக குறைந்த அளவே மழை பெய்துள்ளதால் தற்போது குளங்கள் வறண்டுவிட்டன. வழக்கமாக கத்திரி வெயில் சீசன் சமயங்களில் தான் வனப் பகுதியில் உள்ள குளங்கள் வறண்டுபோகும், ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக மழை குறைவு மற்றும் கடும் வெயிலின் காரணமாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நண்டு பள்ளம், அழுகண்ணி, இரட்டை வாய்க்கால் நல்ல தண்ணீர் குளம், புதுக்குளம் உள்ளிட்ட 58 குளங்களிலும் தரிசு பகுதிகளிலும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் கடும் வறட்சி கூடிவிட்டது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வனத்துறையின் மூலம் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றினாலும் அது வனவிலங்குகளுக்கு போதுமானதாக இல்லை. மழை பெய்தால்தான் வன விலங்குகள் சரணாலயம் பொலிவு பெறும். அதோடு கஜாபுயலின் கோரதாண்டவத்தால் காடுகளில் இருந்த மரங்களும் முறிந்துசிதிலமடைந்து, ஈரத்தன்மையை இழந்து நிற்கின்றன. புயலுக்கு பிறகு மழையே பொழியல, கோடை மழையும் பெய்யல, அதனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது, வாய்பேசும் மனிதனே தவிக்கும் நிலமையை யாரும் கண்டுக்கல, வாயில்லா காட்டு விலங்குகளுக்கா முக்கியத்தும் கொடுப்பாங்க. அரசு முன்வந்து அனைத்து குளங்களையும் தண்ணீர் நிறப்பனும்," என்கிறார்.
கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு கடும் வெப்பத்தினால் சுற்றுலா பயணிகள் வருகையும்வெகுவாக குறைந்துவிட்டது.