தமிழகத்தில் நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது. சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நான்கு தொகுதிகளூக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. நான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, ம.நீ.மய்யம் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். மேலும், சுயேட்சைகள் பலரும் ஆர்வமுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. வேட்புமனுவை திரும்ப பெற மே -2ம் தேதி கடைசி தேதி ஆகும்.