Skip to main content

4 தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

 

வரும் 19.5.2019ல் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்  போட்டியிடும் நான்கு வேட்பாளர்களை  அதிமுக தலைமை இன்று அறிவித்தது.

 

அரவக்குறிச்சியில் செந்தில்நாதன்,   திருப்பரங்குன்றத்தில் முனியாண்டி,  சூலூரில் வி.பி.கந்தசாமி, ஒட்டப்பிடாரத்தில் பெ.மோகன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

 


சூலூர் தொகுதியின் வேட்பாளர் வி.பி.கந்தசாமிகோவை புறநகர் மாவட்ட புரட்சித்தலைவர் அம்மா பேரவைத்தலைவராக உள்ளார்.   அரவக்குறிச்சி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.வி. செந்தில்நாதன்,  கரூர் மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராக உள்ளார்.

 

திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.முனியாண்டி அவனியாபுரம் பகுதிக் கழக செயலாளராக உள்ளார்.   ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பெ.மோகன் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.  இவர் தூத்துக்குடி வடக்கு மாவட்டக்கழக துணைச்செயலாளராக உள்ளார்.


 

a

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நெடுஞ்சாலைத்துறை பணிக்காக' - அதிகாரிகள் போல் உலோகத் தடுப்பான்களைத் திருடிய கும்பல் கைது 

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Kumbam arrested for 'highway department work'- collecting metal barriers as officials

 

சாலையோரம் விபத்துகளைத் தடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ள உலோகத் தடுப்பான்களை நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் போல் ஏமாற்றி திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளின் ஓரத்தில் விபத்துகளையும், மண் சரிவுகளையும் தடுக்கும் வகையில் உலோகத் தடுப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை சில பகுதிகளில் சேதமடைந்த நிலையிலும் காணப்பட்டது. சில நாட்களாக இந்த உலோகங்கள் காணாமல் போனது நெடுஞ்சாலைத் துறையினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலை பணியாளர்கள் ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

அப்போது பாண்டூர் கிராமத்தின் சாலை பகுதியில் ஐந்து பேர் சந்தேகத்திற்கு இடமாக சாலையோர தடுப்பான்களைக் கழட்டிக் கொண்டிருந்தனர். உடனடியாக போலீசாருக்கு நெடுஞ்சாலைத்துறை தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் ஐந்து பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் அனைவரும் சாலையோரத்தில் உள்ள உலோகத் தடுப்பான்களைத் திருடி வண்டிகளில் அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் வந்த வாகனத்தில் 'நெடுஞ்சாலைத் துறை பணிக்காக' என போர்டும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் ஐந்து பேரும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் அல்ல.

 

ஐந்து பேரையும் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், பூபாலன், சங்கர், கார்த்திக், சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு நாளுக்கு முன்னதாகவே வந்து உலோகத் தடுப்பான்களின் போல்டுகளை கழட்டி வைத்துவிட்டுச் சென்று விடுவர். அடுத்த நாள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் போன்று கழட்டி வைக்கப்பட்ட உலோகத் தடுப்பான்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வர். இதுவரை 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான உலோகத் தடுப்பான்களை இந்த கும்பல் திருடியுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு இவர்கள் பயன்படுத்திய லாரி மற்றும் மினி வேன் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் இதேபோன்று வேறு ஏதேனும் இடங்களிலும் திருட்டில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

கானா மூலம் வன்முறை... இளைஞருக்கு போலீஸ் கொடுத்த புதுவித ட்ரீட்மெண்ட்..!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

'' I made a mistake, I made a mistake ... ''  rowdy apologize

 

கோவையில் கானா பாட்டு என்ற பெயரில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பாடல் பாடி சண்டையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீசார் மன்னிப்பு பாடல் ஒன்றைப் பாட வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

 

கோவை சூலூர் பகுதியில் கானா பாடல் பாடும் ஒரு இளைஞர்கள் குழு வன்முறையைத் தூண்டும் விதத்தில் பாடல்களை பாடி சமூகவலைதளத்தில் வெளியிட்டு வந்தது. 'ஸ்வீட் ராஸ்கல்' என்று இருந்த அந்த குழு காலப்போக்கில் ஏற்பட்ட மோதலில் 'எவரெஸ்ட் பாய்ஸ்' என இரண்டாக பிரிந்தது. பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை தினங்களில் இந்த குழுவினருக்கு இடையே மோதல்போக்கு ஏற்படுவது வழக்கமானது. இவர்களது தொல்லை தாங்க முடியாமல் சூலூர் காவல்நிலையத்திற்கு அதிக புகார்கள் வந்த நிலையில், சூலூர் போலீசார் இந்த குழுக்களில் உள்ள 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

'' I made a mistake, I made a mistake ... ''  rowdy apologize

 

இந்த எட்டு பேரில் ஒருவர் அண்மையில் ஜாமீனில் வெளிவர, எதிர் குழுவினர் அவரை ஆயுதங்களைக்கொண்டு தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 6 பேர் மீது மீண்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் சூலூர் ராம்ராஜ் நகரை சேர்ந்த மதியழகன் என்பவர் மகன் அபீஸ் என்ற இளைஞனை போலீசார் தேடிவந்தனர். 12 ஆம்  வகுப்பைப் பாதியில் விட்டுவிட்டு கானா பாடல் பாடும் அபீஸ் கானா பாடல் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டிவந்துள்ளான். அண்மையில் ''திட்டமிட்டு பண்ணிடுவேன் பெரிய மர்டர... கைவெச்சு நீ தாண்ட மாட்ட ஏரியா பார்டர...'' என்ற வன்முறை பாடலை பாடி சமூகவலைதளத்தில் தட்டிவிட்டுள்ளான். இதற்கு மேலும் பொறுக்க முடியாத போலீசார் அவனைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

இதனையடுத்து சூலூர் காவல்நிலைய ஆய்வாளர் மாதையன், உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை டீ கடை ஒன்றில் இருந்து அபீஸை  கைது செய்தனர். உடனடியாக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அபீஸை  மன்னிப்பு கேட்கும் வகையில் கானா பாடல் பாட வைத்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். ''தப்புமேல தப்பு... பண்ணிட்டேன் தப்பு மேல தப்பு... கானா பாடலை தவறா பாடுனதுனால இப்போ நிக்கிறேன் இந்த நிலைமையில'' என பாடவைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.