திருச்சி மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தையான சுஜித் வீட்டின் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில்தவறி விழுந்துள்ள நிலையில் தற்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன்தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவிவருகியது.
இந்நிலையில் உலக அளவில் ''சேவ் சுஜித்'' என்கின்ற ஹேஷ்டேக் டெண்டாகி வருகிறது. தற்போது நடிகரும், பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தை பத்திரமா உயிரோடு மீட்கப்படணும்''மீண்டு வா சுஜித்'' என பதிவிட்டுள்ளார்.