The suitcase incident that froze the capital; The brutality of the sex worker

பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பெரிய சூட்கேஸில் அடைக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவம் தலைநகரை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

Advertisment

இன்று (19/09/2024) காலை சென்னை துறைப்பாக்கம் மேட்டுக்குப்பம் அருகே உள்ள குமரன் குடில் பகுதியில் சாலை ஓரத்தில் அளவில் பெரியதான ட்ராலி சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அந்த பகுதியில் கட்டிட வேலைக்கு வந்தவர்கள் இடையூறாக கிடந்த அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? என அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேநேரம் தன்னுடைய அக்காவை காணவில்லை; அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது; பைண்ட் மை டிவைஸ் என்ற செயலி மூலம் பார்த்ததில் துரைப்பாக்கத்தில் கடைசியாக செல்போன் செயல்பாட்டில் இருந்ததாக தெரிகிறது என இளைஞர் ஒருவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சூட்கேஸில் கைப்பற்றப்பட்ட பெண் சடலம் மற்றும் தன்னுடைய சகோதரியை காணவில்லை என இளைஞர் ஒருவர் அளித்த புகார் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு போலீசார் விசாரணை நடத்தியதில் சூட்கேசில் இறந்து கிடந்தவர் மாதவரத்தைச் சேர்ந்த 32 வயதான திருமணம் ஆகாத இளம்பெண் என்பது தெரியவந்தது. தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு வந்த மொபைல் அழைப்புகளை போலீசார் சோதனை செய்தனர்.

Advertisment

சோதனையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 25 வயது நபருடன் அப்பெண் கடைசியாக பேசியது தெரியவந்தது. தொடர்ந்து மணிகண்டன் வீட்டிற்கு சென்ற போலீசார் கைது செய்து விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடந்த 18ஆம் தேதி இரவு பாலியல் தொழிலாளியான இளம்பெண்ணை மணிகண்டன் துரைப்பாக்கம் பகுதிக்கு வரவழைத்துள்ளார். தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு அதற்கான பணத்தை அப்பெண் கேட்டுள்ளார். அழைப்பதற்கு முன்பு 6000 ரூபாய் கேட்டதாகவும், பின்னர் 12,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என அப்பெண் மணிகண்டனிடம் சண்டை போட்டதாகவும் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தில் மணிகண்டன் அப்பெண்ணை அடித்துக் கொன்றுள்ளர். பின்னர் கொலையை மறைப்பதற்காக அருகில் இருந்த கடை ஒன்றில் பெரிய வகை ட்ராலி சூட்கேஸை வாங்கி வந்த மணிகண்டன், பெண்ணை சுத்தியலால் தாக்கி சேதப்படுத்தி சூட்கேஸில் அடைத்துள்ளார். அதனை அதிகாலை 3 மணி சுமாருக்கு சாலையிலேயே போட்டுவிட்டு வீட்டில் சென்று உறங்கிக் கொண்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.