Advertisment

பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

nn

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்பிருந்த திமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பொன்முடி மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் அதிமுக ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து கடந்த நவம்பர் 7 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணையானது விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணையானது நடந்து வந்த நிலையில் இதில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் முகாந்திரம் இல்லை என பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவிப்பதாக வழக்கை விசாரித்த நீதிபதி வசந்த லீலாதீர்ப்பு வழங்கியுள்ளார்.

Advertisment

judgment Ponmudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe