Advertisment

மனைவி, குழந்தைகளை வெட்டிய சைக்கோ! காக்கிகள் கண் முன்னே கழுத்தை அறுத்து தற்கொலை!

விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் தாலுகா – சல்வார்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி. விறகு வெட்டும் தொழிலாளியான இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், முனீஸ்வரன், முத்துலட்சுமி என இரண்டு பெண் குழந்தைகளும் உண்டு. போதைப் பழக்கம் எதுவும் இல்லாத அந்தோணிக்கு உடல் நிலை நன்றாகத்தான் இருந்திருக்கிறது. மனநிலையில்தான் அவ்வப்போது தடுமாறுவாராம். ஒரு சைக்கோ போலவே நடந்து கொள்வாராம். இன்று அதிகாலை 4 மணியளவில், தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அரிவாளால் வெட்டியிருக்கிறார். அதன்பிறகு ஏற்பட்ட பயத்தில், அந்த ஏரியாவில் உள்ள சவுக்கு ஓடை பகுதியில் ஒளிந்திருக்கிறார்.

Advertisment

குழந்தைகள் இரண்டும் இறந்துவிட்ட நிலையில், முனீஸ்வரி மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். அவரது முனகலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். காலை மணி 6-55 க்கு போலீஸார் அந்தோணியைத் தேடி சவுக்கு ஓடைக்குச் சென்றனர். அப்போது, தன் மர்ம உறுப்பைக் அரிவாளால் அறுத்தபடி இருந்திருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் “டேய் அந்தோணி.. அந்தோணி..” என்று கெஞ்சியபடியே நெருங்கினர். அவனோ, போலீஸாரின் கண் முன்னே அரிவாளால் கழுத்தை அறுத்துக்கொண்டார். ஒரு கை போலீஸாரின் பிடியில் இருந்தும், அப்படியே சரிந்து உயிரைவிட்டார்.

Advertisment

விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன், சம்பவ இடத்துக்கே வந்து விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார். குடும்பத் தகராறு என்று சல்வார்பட்டி கிராமம் சொல்கிறது. ஆனாலும், கொஞ்சம் விவரமான அந்த கிராமத்துப் பெருசு, “என்ன நடந்திருக்கும் தெரியாதா? அதிகாலையில் உறவு கொள்வதற்கு முயற்சித்திருப்பான். மனைவி மறுத்திருப்பாள். அந்தக் கோபத்தில் மனைவியையும் குழந்தைகளையும் வெட்டியிருப்பான். உறவு கொள்வதற்குத் தூண்டியது தன்னுடைய உறுப்புதானே, என்று அதையும் அறுத்திருக்கிறான். சைக்கோன்னாலும், கொலை, தற்கொலை, உறுப்பை அறுத்ததுன்னு எல்லாத்தயும் காரணத்தோடு செய்திருக்கிறானே! கொடுமைதான்!” என்றார்.

சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தோனியின் மனைவி முனீஸ்வரி வாய் திறந்தால்தான், கொலை மற்றும் தற்கொலைக்கான உண்மைக் காரணம் தெரியவரும்.

Suicide
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe