Advertisment

வாலிபர் தற்கொலை - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆண்டிகுழி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். 22 வயதான இவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய நிலத்தை ஏமாற்றி சிலர் கிரையம் பெற்றதாகவும், அந்த நிலத்தை திரும்பி தர மறுத்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு கிருஷ்ணராஜ் தற்கொலை செய்து கொண்டதாக இறந்தவரின் சித்தப்பா திருநாவலூரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

Protest

இதற்கிடையே புகார் மனுவின் மீது உடனடியாக விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் திருநாவலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

protest relatives Suicide
இதையும் படியுங்கள்
Subscribe